Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கரைக்கு வந்த மீனவர்கள்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்னல் தாக்கியதில் மீனவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள சாமியார்பேட்டை பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு மீனவர். இந்நிலையில் இவர் கடலில் மீன்பிடித்து விட்டு கடற்கரைக்கு திரும்பியுள்ளார். அப்போது பலத்த மழை பெய்த நிலையில் வலையிலிருந்த மீன்களை பாலகிருஷ்ணன் மற்றும் அவருடன் இருந்த சக மீனவர்கள் எடுத்துக் கொண்டு இருந்துள்ளனர்.

இதனையடுத்து திடீரென பாலகிருஷ்ணன் உள்பட 4 பேரின் மீது மின்னல் தாக்கியதால் சம்பவ இடத்திலேயே மயங்கி கீழே விழுந்துள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற மீனவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பாலகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அதன்பின் மற்ற மூன்று நபர்களுக்கும் மருத்துவமனையில் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து மீனவர்களை மின்னல் தாக்கிய நிலையில் அருகிலிருந்த பனிரெண்டு நபர்களுக்கு அதிர்ச்சி காரணத்தால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. தற்போது அவர்களும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |