Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இடிமின்னலுடன் கூடிய மழையின் போது…. வாயில்லா ஜீவன்களுக்கு நடந்த விபரீதம்…. அதிகாரிகளுக்கு விடுத்துள்ள கோரிக்கை….!!

மின்னல் தாக்கியதில் 5 செம்மறி ஆடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சுப்பிரமணியகவுண்டன்வலசு பகுதியில் அர்ஜூனன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விவசாயியான கந்தசாமி என்ற மகன் உள்ளார். இவர் தனது தோட்டத்தில் ஏராளமான செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் வெள்ளகோவில் பகுதியில் பலத்த இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது.

அப்போது தோட்டத்தின் மரத்தின் அடியில் நின்று கொண்டிருந்த 5 செம்மறி ஆடுகள் மீது திடீரென மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. இதன் மதிப்பு ரூ.45 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து கந்தசாமி வருவாய்த் துறை மற்றும் கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற கால்நடை மருத்துவர் மற்றும் அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் கந்தசாமி இறந்த 5 ஆடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |