பீகாரில் மின்னல் தாக்கி என்ற ஒரே நாளில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் ஒருபுறம் வேகமாக பரவி பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வரும் சூழ்நிலையில், இயற்கை பேரிடர் வேறு நம்மை அவ்வப்போது சீண்டிப் பார்த்து வருகிறது. அந்த வகையில், பீகார் மாநிலத்தில் தற்போது இடி மின்னலுடன் கூடிய கடுமையான மழை சமீப நாட்களாக பொழிந்து வருகிறது.
இந்த மழையுடன் பலத்த சூறைக்காற்று வீசுவதால் பல இடங்களில் மின்கம்பங்கள் மீது மரங்கள் சாய்ந்து மின்தடை என்பதும் ஏற்பட்டுள்ளது. மேலும் இடி மின்னல் தாக்கியதில் இன்று ஒரே நாளில் மட்டும் 22 பேர் உயிரிழந்துள்ளதாக பேரிடர் மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். அதேபோல் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 4 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் எனவும் அம்மாநில முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.