மின்னல் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழவிளாங்குடி காலனியில் அர்ஜூனன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வந்துள்ளது. இதனால் அர்ச்ஜுனன் வீட்டின் அருகே மழை நீர் சூழ்ந்துள்ளது. அப்போது மழைநீர் வீட்டிற்குள் வராமல் இருக்க அர்ஜுனன் கால்களால் தண்ணீரை வெளியே தள்ளியுள்ளார்.
அப்போது அப்பகுதியில் திடீரென மின்னல் தாக்கியதில் அர்ஜுனன் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அர்ஜுனனின் உடலை உடனடியாக மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.