Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

துணிதுவைத்துக் கொண்டிருந்த தொழிலாளி…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்னல் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள சேர்வலாறு பாபநாசம் அணை பகுதியில் சாரல் மழை பெய்துள்ளது. தற்போது திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சுத்தமல்லி பகுதியில் பலத்த இடியுடன் கூடிய மலை பெய்துள்ளது. அப்போது சத்யா நகர் பகுதியில் வசிக்கும் வேலுச்சாமி என்பவர் துணி துவைத்துக் கொண்டிருந்தார்.

இதனையடுத்து திடீரென வேலுச்சாமி மீது மின்னல் தாக்கியது. இதில் வேலுச்சாமி பலத்த காயமடைந்தார். அதன்பின் அருகில் உள்ளவர்கள் வேலுச்சாமியை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் வேலுச்சாமி செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |