மின்னல் தாக்கியதில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள வலசை கிராமத்தில் பிச்சை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜேஷ் மேலூர் அருகில் உள்ள முசுண்டகிரிபட்டியில் உள்ள அவரது மாமனார் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் மேலூர் பகுதியில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது. அப்போது ராஜேஷ் கண்மாய் பக்கம் நடந்து சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ராஜேஷை மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் பிரஸ்னேவ் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி ரவிச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜேஷின் உடலை உடனடியாக மீட்டு மேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.