Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மேய்ந்து கொண்டிருந்த ஆடுகள்…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. மேற்பார்வையிட்ட அதிகாரிகள்….!!

மின்னல் தாக்கியதில் 19 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மூலக்கரைப்பட்டி பகுதியில் பண்டாரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக ஆடு வைத்து மேய்த்து வருகிறார். இந்நிலையில் பண்டாரம் வழக்கம் போல் வண்ணான்குளம் பகுதியில் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்ய தொடங்கியது.

இந்நிலையில் திடீரென மின்னல் தாக்கியதில் மேய்ந்து கொண்டிருந்த 19 ஆடுகளும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் சித்ரா மற்றும் மூலைக்கரைப்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த ஆடுகளை பார்வையிட்டனர்.

Categories

Tech |