Categories
உலக செய்திகள்

“மீன்பிடி உரிமைகள் விவகாரம்” அவர்களின் நம்பகத்தன்மைக்கு ஒரு சோதனை…. பிரான்ஸ் ஜனாதிபதியின் எச்சரிக்கை….!!

மீன்பிடி உரிமைகள் விவகாரம் பிரித்தானியாவின் உலகளாவிய நம்பகத்தன்மைக்கு ஒரு சோதனை என்று அந்நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.

மீன்பிடி உரிமைகள் விவகாரம் பிரித்தானியாவின் உலகளாவிய நம்பகத்தன்மைக்கு ஒரு சோதனை என்று அந்நாட்டு ஜனாதிபதியான இம்மானுவேல் மாக்ரோன் எச்சரித்துள்ளார். இவ்வாறு எச்சரித்ததன் மூலமாக மாக்ரோன் பிரித்தானியா உடனான பதட்டத்தை அதிகரித்துள்ளார். ரோமில் G20 உச்சி மாநாட்டிற்கு முன்னதாக பேசிய மாக்ரோன் எந்த தவறும் செய்யாதீர்கள் இது ஐரோப்பியர்களுக்கு மட்டுமல்ல அவர்களின் அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும் என்று கூறினார். ஏனென்றால் நீங்கள் ஒரு ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பல வருடங்கள் செலவிடுவீர்கள்.

அதன்பின் ஒரு சில மாதங்களுக்கு பிறகு உங்களுக்கு மிகவும் பொருத்தமான அம்சங்கள் என முடிவு செய்யப்பட்டதற்கு எதிராக நீங்கள் செயல்படுவது உங்கள் நம்பகத்தன்மைக்கு பெரிய அடையாளமாக இருக்காது என்று மாக்ரோன் கூறினார். ஆகவே பிரெக்சிட் கடமைகளில் இருந்து பிரித்தானியா பின்வாங்குவது நம்பகத்தன்மையின் பெரிய அடையாளமாக இருக்காது என ஏற்கனவே மாக்ரோன் கூறியுள்ளார். இதற்கிடையில் பிரித்தானியா அதன் நலன்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்தார். மேலும்  ஐரோப்பிய ஒன்றியம்- பிரித்தானியா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் மீறபட்டிருக்கலாம் என்று தான் அஞ்சுவதாக போரிஸ் ஜான்சன் கூறினார்.

Categories

Tech |