தொடர் கனமழையால் அறுந்து விழுந்த மின் கம்பிகளில் சிக்கி 4 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
கடலூர் மாவட்டத்திலுள்ள டி.வி.புத்தூர் கிராமத்தில் சம்பா சாகுபடி செய்யப்பட்டிருந்த வயல்களில் கனமழை காரணத்தினால் மழைநீர் தேங்கி நின்றுள்ளது. இதில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்திருந்த நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. அதன்பின் கவலையில் இருந்த விவசாயிகள் மழைநீரை வயலில் இருந்து வெளியேற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
பின்னர் தொடர்ந்து பெய்த கனமழை காரணத்தினால் நாவலூர் கிராமத்தில் முருங்கை மரம் வேரோடு முறிந்து மின் கம்பிகள் மீது சாய்ந்துள்ளது. அப்போது அறுந்து விழுந்த மின் கம்பியில் சிக்கி 4 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதனை போல் புவனகிரி உள்பட 5 மாவட்ட முழுவதும் இடி-மின்னலுடன் பலத்த கனமழை பெய்து வருகின்றது. இதனை தொடர்ந்து இம்மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் விவசாயிகள் தற்போது நடவு பணிகளை தொடங்கியிருக்கின்றனர்.