மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் உள்ள டவுன் சுந்தர விநாயகர் கோவில் தெருவில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயக்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் நெல்லை டவுன் காட்சி மண்டபம் பகுதியில் இருக்கும் ஒர்க் ஷாப்பில் ஊழியராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக ஜெயக்குமார் மீது மின்சாரம் பாய்ந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஜெயக்குமார் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.