மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முரளி என்ற மகன் இருந்துள்ளார். இவருடைய நண்பரான அஜித்தின் தாயார் வீடு ஸ்டேட் பாங்க் காலனியில் உள்ளது. அங்கு அவர்கள் வீட்டுக்குள் தேங்கிக் கிடந்த மழை நீரை மின்சார மோட்டார் வைத்து அகற்றிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு அஜித்தை பார்க்க சென்ற முரளி எதிர்பாராதவிதமாக மோட்டார் வயரை தொட்டுள்ளார்.
இதில் திடீரென முரளி மீது மின்சாரம் பாய்ந்தது. இதனைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் முரளியை உடனடியாக மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே முரளி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.