Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற மாணவன்…. மின்சாரம் பாய்ந்து விபரீதம்….சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மின்சாரம் பாய்ந்ததில் கல்லூரி மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள திருப்பராய்த்துறை கிராமத்தில் வசித்து வருபவர் கருணாகரன். இவருடைய மகன் கார்த்திக் ஸ்ரீரங்கத்தில் இருக்கும் கல்லூரியில் பயின்று வந்தார். இவர் கல்லூரி விடுமுறை நாட்களில் பெயிண்ட் வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் கார்த்திக் அண்ணா சிலை அருகில் உள்ள வீட்டில் பெயிண்டிங் வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதத்தில் அவருடைய தலை மின்கம்பியில் உரசியதால் கார்த்திக் மீது மின்சாரம் பாய்ந்தது. அதன் பிறகு அருகில் இருப்பவர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கார்த்திக் உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |