Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பணியில் ஈடுபட்ட தொழிலாளி…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மேற்கூரை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த தொழிலாளி மீது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள மேல்குறியாமங்கலம் கிராமத்தில் மருத பிள்ளை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சேதமடைந்து இருக்கும் வீட்டின் மேற்கூரையை சீரமைக்கும் பணியில் மருத பிள்ளை ஈடுபட்டிருக்கிறார்.

அப்போது மின் கம்பத்தில் இருந்து வீட்டிற்கு வரும் மின் இணைப்பில் ஏற்பட்ட கசிவு காரணத்தினால் வீட்டின் மேற்கூரையின் தகரத்தில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்திருக்கிறது. இதனை அறியாமல் மருத பிள்ளை மேற்கூரை அப்புறப்படுத்திய போது அவரை மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |