மின்சாரம் தாக்கி வட மாநிலத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள கந்தன்சாவடி அருகே மின் சாதன பொருள் கடையில் பெரு(35), பிங்கு(22) என்ற இரண்டு வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையில் கடையின் அருகே நீர் தேங்கியதால் அதனை மோட்டார் மூலம் வெளியேற்ற முயற்சித்துள்ளனர். அப்போது மோட்டாரை இயக்க முற்பட்ட போது எதிர்பாராத விதமாக இருவரும் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டனர்.
இதில் மயக்கம் அடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.