மின்சாரம் தாக்கி பசுக்கன்று உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள நெமிலி பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் அசநெல்லிகுப்பம் பகுதியில் மின்சார கம்பி அருந்து தாழ்வாக கிடந்துள்ளது. இந்நிலையில் அசநெல்லிகுப்பம் பகுதியில் அண்ணாமலை என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் பசு, மாடுகளை வளர்த்து வருகிறார். இதனையடுத்து அண்ணாமலை வயலுக்கு பசு, கன்று குட்டிகளை மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்றுள்ளார். இந்நிலையில் அனைத்து மாடுகளும் மேய்ந்து கொண்டிருந்தபோது ஒரு கன்றுக்குட்டி அறுந்து கிடந்த மின்சார கம்பி திடீரென விழுந்ததால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
இதனைப் பார்த்த அண்ணாமலை அதிர்ச்சியடைந்து மற்ற பசு, கன்றுகளை சுதாரிப்பாக அழைத்துச் சென்றார். இதனையடுத்து அண்ணாமலை மின்சார வாரியத்தினரிடம் தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மின்சார வாரியத்தினர் மின் இணைப்பை துண்டித்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து அண்ணாமலை நெமிலி காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.