Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

விளையாடி கொண்டிருந்த குழந்தை…. திடீரென நடந்த விபரீதம்…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

மின்சாரம் தாக்கி 8 மாத பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அஞ்சுகுழிபட்டி என்ற பகுதியில் மூக்கன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பச்சையம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சக்தி தேவி என்ற 8 மாத பெண் குழந்தை உள்ளது. கடந்த 3 வருடங்களாக இவர்கள் ஒரு தேங்காய் களத்தில் தங்கி தேங்காய் உடைத்து உலர்த்தும் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் மூக்கன் தேங்காய் களத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். இவரது மனைவியான பச்சையம்மாள் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். இதனையடுத்து குழந்தையான சக்திதேவி வீட்டில் தவழ்ந்து விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது குழந்தை சக்திதேவி எதிர்பாராதவிதமாக வீட்டில் இருந்த ஜங்ஷன் பாக்சின் மேல்புறத்தில் இருந்த வயரை பிடித்துள்ளது. இதில் குழந்தை சக்திதேவி மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

இதனையடுத்து சிறிது நேரம் கழித்து பச்சையம்மாள் சமையலறையிலிருந்து வெளியே வந்து பார்த்த போது குழந்தை அசைவு இல்லாமல் இருப்பதை பார்த்துள்ளார். அதன்பின் பச்சையம்மாள் சந்தேகமடைந்து குழந்தையை தூக்கியபோது மின்சாரம் தாக்கி பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பச்சையம்மாள் அவரது கணவன் மூக்கனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி வீட்டிற்கு மூக்கன் விரைந்து சென்றுள்ளார். அதன்பின் மூக்கன் மோட்டார் சைக்கிளில் குழந்தை சக்தி தேவியை காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளார். ஆனால் குழந்தை சக்திதேவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காங்கேயம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |