மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அத்திமரப்பட்டி பகுதியில் ஜெயராமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முத்தையாபுரத்தில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் மின் ஆய்வாளராக வேலை பார்த்து வருகிறார். இவருடன் இந்திராநகர் பகுதியில் வசிக்கும் மாரியப்பன் என்பவரும் மின் ஆய்வாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 1-ஆம் தேதி கீழவேலாயுதபுரம் பகுதியில் உயர் மின்வயர் பாதையில் உள்ள கருவேல மரங்களை வெட்டி கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக மின் ஒயரில் கருவேல மரங்கள் உரசியதால் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். இதனை பார்த்த மற்ற ஊழியர்கள் காயமடைந்த 2 பேரையும் உடனடியாக மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனையடுத்து மாரியப்பனை மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மாரியப்பன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த புதியம்புத்தூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.