மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு பகுதியில் மாதவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்து கலா என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு சுதிர் மற்றும் சுகன் செல்வா என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் சுதிர், சுகன் செல்வா ஆகிய இருவரும் சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது டிரான்ஸ்பார்மரின் அருகில் அறுந்து கிடந்த மின்கம்பியை சுகன் செல்வா பிடித்துள்ளார்.
இதனையடுத்து மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து சுகன் செல்வா தூக்கி எறியப்பட்டுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சுதிர் மற்றும் அருகில் உள்ள சிறுவர்கள் வீட்டிற்கு சென்று நடந்ததை கூறியுள்ளனர். இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சுகன் செல்வாவை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சுகம் செல்வா பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.