Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கவனமா இருக்க கூடாதா…. கூலி தொழிலாளிக்கு நடந்த சோகம்…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாடு பகுதியில் சந்திரசேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சந்திரசேகர் தென்னம்மநாட்டிலுள்ள கோவிலில் மின்சார விளக்கு சுவிட்சை போட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சந்திரசேகரை மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனை பார்த்த அருகிலுள்ளவர்கள் ஒரத்தநாடு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஒரத்தநாடு காவல்துறையினர் சந்திரசேகரின் சடலத்தை கைப்பற்றி ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |