Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

குளிக்க சென்ற தொழிலாளி…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ரத்தினமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் மாதவன். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் அம்பிரிஷிபுரம் பகுதியில் இருக்கும் ஒரு குடிநீர் நிறுவனத்தில் தங்கி வேலைப்பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் குளிப்பதற்காக குளியல் அறைக்கு சென்ற போது அங்கிருந்த குழாய் மீது மின் வயர் அறுந்து கிடந்ததை கவனிக்காமல் குழாயை தொட்டுள்ளார்.

இதனை அடுத்து அவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த வந்த காவல்துறையினர் மாதவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |