Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

விலங்கிற்கு போடப்பட்ட வேலி…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

காட்டுப்பன்றிக்காக வைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மேட்டுக்குப்பம் கிராமத்தில் விநாயகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சாக்கு பை தைக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வனப்பகுதியின் அருகில் சீட்டு அமைத்து சாக்குப்பை தைத்து வந்துள்ளார். அப்போது அங்கு இருக்கும் விவசாய நிலத்தில் காட்டுப்பன்றிக்காக வைக்கப்பட்டிருந்த மின்வேலியில் எதிர்பாராவிதமாக சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இது பற்றி அவரது மனைவி தனலட்சுமி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் விநாயகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |