Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளி…. திடீரென நடந்த விபரீதம்…. வேதனையில் வாடும் குடும்பத்தினர்….!!

மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நம்பிபத்து கிராமத்தில் தனியார் தும்பு தொழிற்சாலைக்கு மின் இணைப்பு வழங்குவதற்காக பணி நடந்து வருகிறது. இந்த பணியில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளியாக கீழசண்முகபுரம் பகுதியில் இசக்கிமுத்து என்பவரின் மகனான கார்த்திக் ராஜா என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கார்த்திக் ராஜா மின்கம்பத்தில் ஏறி வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின் கம்பத்தில் உள்ள வயரில் மின்சாரம் தாக்கியதில் கார்த்திக்ராஜா தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார்.

இதனைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் கார்த்திக் ராஜாவை உடனடியாக மீட்டு வள்ளியூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே கார்த்திக்ராஜா பரிதாபமாக உயிரிழந்தார். இதனையறிந்த கார்த்திக் ராஜாவின் உறவினர்கள் வள்ளியூர் அரசு மருத்துவமனை முன்பு திரண்டனர். இதனையடுத்து கார்த்திக் ராஜாவின் இறப்பிற்கு நீதிகேட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வள்ளியூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பணகுடி காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்கும்படி தெரிவித்தனர். இதனையடுத்து உறவினர்கள் பணகுடி காவல் நிலையத்திற்கு சென்று இது குறித்து புகார் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கார்த்திக் ராஜாவின் இறப்பிற்கு நீதி கிடைக்கும் வரை அவரது உடலை வாங்க போவதில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |