Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மின்கம்பத்தில் வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளி…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளம் பகுதியில் தாமோதரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துக்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு பார்வதி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். தற்போது மின்வாரிய அலுவலர்களுடன் முத்துக்குமார் தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் முத்துக்குமார் சாத்தான்குளம் அருகில் பொத்தகாலன்விளையில் மின்கம்பத்தை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் முத்துக்குமார் பலத்த காயமடைந்தார். இதனையடுத்து முத்துக்குமாரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி முத்துக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த தட்டார்மடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |