Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

துணியை எடுக்க சென்ற தொழிலாளி…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சுத்தமல்லி பகுதியில் பழனிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெள்ளைச்சாமி என்ற மகன் இருந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் வெள்ளைச்சாமி இரும்பு கம்பி கொடியில் காய்ந்த துணிகளை எடுக்கச் சென்றுள்ளார். அப்போது வெள்ளைச்சாமி மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதனைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் வெள்ளைச்சாமியை உடனடியாக மீட்டு அப்பகுதியில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

ஆனால் வெள்ளைச்சாமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெள்ளைச்சாமியின் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |