மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாப்பாக்குடி பகுதியில் சுடலை ஒளிவு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சதீஷ் கோபி என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நாராயணசாமி கோவிலின் கிணற்றிலிருந்து அருகிலுள்ள தொட்டிக்கு மின் மோட்டார் மூலம் தண்ணீர் ஏற்றப்படுகிறது. இதனையடுத்து சதீஷ் கோபி அங்குள்ள மின் குழாயில் கை வைத்துள்ளார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கி சதீஷ் கோபி தொட்டிக்குள் தலைகீழாக விழுந்து கிடந்துள்ளார்.
இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் சதீஷ் கோபியை உடனடியாக மீட்டு முக்கூடல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் சதீஷ் கோபியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல்அறிந்த பாப்பாக்குடி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சதீஸ் கோபியின் உடலை கைப்பற்றி அம்பை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்