Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்த கனமழை…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பேட்டை நரிக்குறவர் காலனியில் அரச குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பேட்டை பகுதியில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது அரச குமார் தனது செல்போனுக்கு சார்ஜ் ஏற்றுவதற்காக சார்ஜரை மின்பெட்டியில் பொருத்தி சுவிட்ச்சை போட்டுள்ளார். அப்போது அரச குமார் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.

இதனைப் பார்த்த அரச குமாரின் உறவினர்கள் அவரை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அரச குமார் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |