Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மின்விளக்கு அமைத்து கொண்டிருந்த வாலிபர்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கே.வி.கே.சாமி நகர் பகுதியில் நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வகுமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தூத்துக்குடி தபால் தந்தி காலனியில் உள்ள ஒரு கடையில் டைல்ஸ் ஒட்டும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் செல்வகுமார் மின்விளக்கு அமைக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக செல்வகுமார் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வகுமாரின் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த தூத்துக்குடி சிப்காட் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |