வாட்டர் ஹீட்டரை ஆன் செய்யும் போது மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள எம்.எஸ். நகர் பகுதியில் வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் வினோத் வீட்டின் குளியலறையில் உள்ள வாட்டர் ஹீட்டரை குளிப்பதற்காக ஆன் செய்ய முயன்றுள்ளார்.
அப்போது திடீரென வினோத் மீது மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனை பார்த்த அப்பகுதியினர் வினோத்தை உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி வினோத் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.