மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கருங்குளம் பகுதியில் இசக்கிராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கிருஷ்ணாபுரத்தில் உள்ள கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ராமு என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் இசக்கிராஜா நாளை நடைபெறவிருக்கும் மேலகுளத்துக்கரை இசக்கியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழாவில் தோரணம் கட்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட இசக்கிராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த செய்துங்கநல்லூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இசக்கிராஜின் உடலை உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.