Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வாலிபர்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சென்னாவரம் கிராமத்தில் கோவிந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தங்கராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சேதுராகுப்பம் கிராமத்தில் உள்ள நிலத்திற்கு தங்கராசு தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார். அப்போது பம்புசெட்டில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி பலத்த காயமடைந்த தங்கராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து கோவிந்தன் நிலத்திற்குச் சென்று நீண்ட நேரம் ஆனதால் மகனை தேடி வந்துள்ளார்.  அப்போது தங்கராஜ் நிலத்தில் விழுந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த கோவிந்தன் அவரை உடனடியாக மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு தங்கராஜின் உடலை பரிசோதனை செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |