சரக்கு ரயிலில் ஏறிய வாலிபரை மின்சாரம் தாக்கியதால் படுகாயம் அடைந்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் ஒன்று நின்று கொண்டிருந்தது. இந்நிலையில் 31 வயதுடைய வாலிபர் ஒருவர் சரக்கு ரயில் மீது ஏறி உள்ளார். அப்போது மேலே சென்ற உயர்மின் அழுத்த கம்பியில் மின்சாரம் தாக்கி வாலிபர் தூக்கி வீசப்பட்டுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் சுயநினைவின்றி கிடந்துள்ளார். இது பற்றி அறிந்த ரயில்வே காவல்துறையினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பின்னர் விசாரணை நடத்தியதில் அவர் பீகார் மாநிலத்தில் உள்ள பர்கத் மாவட்டம் ஜமுலர்தா பகுதியில் வசிக்கும் சுதன் என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து இவர் சினிமாவில் சண்டைக் காட்சியில் நடிப்பதற்காக சரக்கு ரயில் மீது ஏறி குதித்து ஒத்திகை பார்த்ததாகவும் மற்றும் சினிமாவில் நடிப்பதாகவும் காவல்துறையிடம் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து உயர்மின் அழுத்த மின்சாரம் தாக்கி உடலில் தோல் சிதைந்து படுகாயமடைந்துள்ளதால் அவர் சுயநினைவின்றி கூறி வருகிறாரா என்பது குறித்து ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.