மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பகுதியில் நந்தகுமார் என்பவர் வசித்து வசித்து வந்துள்ளார். இவர் படித்து முடித்துவிட்டு விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் நந்தகுமார் நிலத்திற்கு மாடுகளை மேய்த்து சென்றுள்ளார். அப்போது டிரான்ஸ்பார்மர் அருகே மின்சார வயர் அறுந்து கிடந்துள்ளது. இதனைப் பார்க்காத நந்தகுமார் மின் வயரை மிதித்துள்ளார். இதனால் மின்சாரம் தாக்கி நந்தகுமார் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் மின்சாரத்துறை மற்றும் தாலுகா காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் நந்தகுமாரின் சடலத்தை கைப்பற்றி ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.