தேவையான பொருட்கள்
புதினா இலை – 1 கைப்பிடி
எலுமிச்சைச்சாறு – 2 டீஸ்பூன்
சீரகப்பொடி – 1/4 டீஸ்பூன்
மிளகு பொடி – 1/2 டீஸ்பூன்
பொடித்த வெல்லம் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை
- முதலில் புதினா இலைகளை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
- பின்னர் புதினா இலைகளுடன் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
- இதில் மிளகுப் பொடி, பொடித்த வெல்லம், சீரகப்பொடி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
- புதினா ஜூஸ் தயார்.
நன்மைகள்
- வரட்டு இருமல் போக்கும்
- நரம்பு தளர்ச்சியை குணப்படுத்தும்
- அதிக பசியை தூண்டும்
- மலச்சிக்கலைப் போக்கும்
- ரத்தத்தை சுத்தமாக்கி கெட்ட கொழுப்பை அகற்றும்.
- தலைவலி, தசைவலி போன்றவற்றிற்கு மருந்தாகும்.
- கர்ப்பிணிப் பெண்களுக்கு அடிக்கடி ஏற்படும் வாந்தியை தடுக்கும்.