புதினா ரசம்
தேவையான பொருட்கள் :
தக்காளி சாறு – 2 கப்
புதினா – 1 கப்
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
சீரகத்தூள் – 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன்
கடுகு – 1/4 ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் புதினா இலைகளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும் . பின் சிறிது தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். இதனுடன் உப்பு, மிளகாய்தூள், சீரகத்தூள் பெருங்காயத் தூள், தக்காளி சாறு சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்கவிட்டு எண்ணெயில் கடுகு தாளித்துக் கொட்டினால் புதினா ரசம் தயார் !!!