தமிழக முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த கே.பி அன்பழகனை எடப்பாடி பழனிச்சாமி நிமிஷத்துக்கு நிமிஷம் அண்ணன் என பேசி மனம் குளிர செய்ததை அதிமுக தொண்டர்கள், குறிப்பிட்டு பேசி வருகின்றார்கள்.
தருமபுரி மாவட்டத்தில் அதிமுக கட்சி தொண்டர்களிடம் பேசிய கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி, இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா இருக்கின்ற போது தர்மபுரி மாவட்டம் வளர்ச்சி பெறுவதற்காக நடவடிக்கை எடுத்தார்கள், அம்மா அவர்கள் சிறப்பான திட்டங்களை இந்த நாட்டு மக்களுக்கு தந்தார்கள், அதோடு அம்மாவுடைய அரசு நான் முதலமைச்சராக இருந்தபோது அண்ணன் அவர்கள் ( கே.பி அன்பழகன்) தொடர்ந்து வலியுறுத்தினார்கள்..
நீரேற்று மூலம் கொம்பன் பள்ளி டேம் தண்ணீரைக் கொண்டு வர திட்டம் கொடுக்க வேண்டும் என்று சொன்னார்கள், அந்த திட்டத்தை கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுத்தோம். ஆனால் இன்றைக்கு இருக்கின்ற விடியா அரசாங்கம் நிலுவையிலே போட்டுவிட்டது. விவசாயிகளுடைய பிரச்சினைகளை பார்க்கவில்லை, விவசாயிகளிடம் உணர்வுகளை புரிந்து கொள்ளாத அரசாங்கம், விவசாயிகளுடைய நலன் கருதி அதிமுக கொண்டு வந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்,
நிறைவேற்றி விட்டால் மீண்டும் அம்மாவுடைய ஆட்சி வரும் போது நாடு முழுவதும் இந்த திட்டத்தை நிறைவேற்றப்படும். திமுக ஆட்சியில் ஓராண்டுகளில் சாதனை செய்தோம் என்று சொல்கிறார்கள். நாங்கள் கொண்டு வந்து திட்டத்தையாவது செயல்படுத்தி ஓரளவாது மக்களிடம் நல்ல பேரை எடுங்கள். அதையும் துரிதமாக செயல்படுத்த வேண்டும்.சத்திரம் கால்வாய் முதல் பொழிக்கரை ஏரி வரை பணிகள் துவங்கியுள்ளார்கள். அந்த பணியும் துரிதமாக முடிக்க வேண்டும்.
அதோடு அண்ணன் ( கேபி.அன்பழகன்) அவர்கள் சட்டமன்றத்தில், சட்ட கல்லூரி வேண்டுமென்று கேட்டிருக்கிறார்கள், அந்த சட்ட கல்லூரியை இந்த தர்மபுரி மாவட்டத்தில் மக்கள் நலன் கருதி கொண்டு வந்தோம். அதற்கு கட்டட நீதியும் ஒதுக்கி திட்டத்தை கொண்டு வந்த அரசாங்கம் அம்மாவுடைய அரசாங்கம். அதேபோல 4 கலை கல்லூரி கொடுத்தோம், எங்கள் ஆட்சியில் தான் கல்வி செழிக்க, கல்வி உயர, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, கடைக்கோடியில் இருக்கின்ற சாதராண பொதுமக்கள் மாணவ, மாணவிகள் குறைந்த கட்டணத்தில் கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக உயர்கல்வியைகொடுத்தோம்.
கே.பி அன்பழகன் அப்போது அமைச்சராக இருந்தார். உயர்கல்வி அமைச்சராக இருந்தார். எப்போதெல்லாம் எங்களை சந்திக்கிறாரோ, அப்போதெல்லாம் பிரம்மாண்டமான கல்வி வேண்டும் என்று கேட்பார். அதைவிட எங்கே ஏழை மக்கள் திட்டப்பணி, தாய் இல்லாமல் இருக்கக்கூடிய குழந்தைகளுக்கு சிகிச்சை கிடைப்பதற்காக தரமான சிகிச்சை அளிப்பதற்கு நல்ல கட்டிட வசதி வேண்டும் என்கிறார்.
12 கோடி நிதி ஒதுக்கி, பிரம்மாண்டமான கட்டிடம் கொடுத்திருக்கின்றோம். நிறைய திட்டங்களை அம்மா அரசு செயல்படுத்தியது. ஈச்சம்பாடி அணைக்கட்டில் இருந்து 300கோடி ரூபாயில் திட்டம் உருவாக்குகின்ற செய்தியையும் தெரிவிக்கின்றேன், கே.பி அன்பழகன் அண்ணன் அவர்கள் எடுத்த முமுயற்சி, சட்டமன்ற உறுப்பினர்கள் எடுத்த முயற்சி. இங்கே இருக்கக்கூடிய விவசாய பெருமக்களுக்கு கொடுக்கப்பட்ட வீடு, ஒகேனக்கலில் இருந்து தடுப்பணை கட்டி நீரேற்று மூலமாக இந்த தர்மபுரி மாவட்டத்தில் இருக்கின்ற ஏழைகளுக்கு நீர் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கை நாங்கள் பரிசீரித்துக் கொண்டுவந்தோம்.
அதற்கான விரைவான திட்டறிக்கை தயாரிக்கும் பணி துவங்குகின்ற போது ஆட்சி மற்றும் ஏற்பட்டது. மீண்டும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு வருகின்றபோது, ஒகேனக்கல் நீர் ஏற்றும் திட்டத்தை உருவாக்கி, வருகின்ற ஏரிகளில் எல்லாம் நீர் ஏற்றுவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தார்.