Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“அதுல கட்டவே கூடாது” பொதுமக்களுக்கு விழிப்புணர்வு…. மின்வாரிய அதிகாரியின் அறிவுரை…!!

மின் கம்பம் மற்றும் மின் மாற்றிகளில் விளம்பரப் பலகைகளை கட்டக்கூடாது என மின்வாரிய செயற்பொறியாளர் அறிவுறுத்தியுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் சுதாகரன் செய்திக்குறிப்பில் கூறும் போது பொதுமக்கள் மழைக்காலத்தில் மின் விபத்துகள் ஏற்படாத வகையில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் தொழிற்சாலை மற்றும் கடைகளில் ஐ.எஸ்.ஐ முத்திரை இருக்கும் மின் சாதனங்களை மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும். இதனை அடுத்து மின்கம்பங்களில் ஆடு மற்றும் மாடுகள் கட்டவோ, துணிகளை காயப் போடவோ கூடாது. அதன் பின் பொதுமக்கள் எங்காவது மின் வயர்கள் அறுந்து கிடப்பதை பார்த்தால் உடனடியாக கட்டணமில்லா தொலைபேசி எண் 1912-ஐ தொடர்பு கொள்ள வேண்டும்.

இதனை தொடர்ந்து ஈரக்கைகளுடன் மின் சாதனங்களை இயக்கக் கூடாது எனவும், அவ்வாறு இயக்கி விபத்து ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவரை தொடாமல் உலர்ந்த கட்டையால் காப்பாற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் விபத்து ஏற்பட்டால் பொதுமக்கள் உடனடியாக மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதன் பின் மின் கம்பத்தில் பதாகைகள் மற்றும் விளம்பரத் தட்டிகளை கட்டக்கூடாது என மின்வாரிய செயற்பொறியாளர் சுதாகரன் கண்டிப்புடன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |