வேலை பார்த்து கொண்டிருந்த போது மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்திலுள்ள சோமரசம்பேட்டை பகுதியில் சந்திரகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மின்வாரிய அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அதவத்தூர் பகுதியில் இருக்கும் மின் கம்பத்தில் ஏறி சந்திரகுமார் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்து விட்டது.
இதனை அடுத்து படுகாயமடைந்த சந்திரகுமாரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சந்திரகுமார் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.