Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இதை கைவிட வேண்டும்…. மின்வாரிய ஊழியர்களின் போராட்டம்…. அரியலூரில் பரபரப்பு…..!!

மத்திய அரசை கண்டித்து மின்வாரிய ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டத்தில் மின்சார வாரிய அலுவலகம் முன்பு மின்வாரிய ஊழியர்கள் கூட்டுக்குழு சங்க தலைவர் கண்ணன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டம் மின்சார மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று நடைபெற்றது. மேலும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஒன்றுபட்ட மின் வாரியங்களை சிறு, சிறு துண்டுகளாக்கியும், மின்சார விநியோகத்தை முற்றிலும் தனியார் மயமாக்கும் போக்கையும் கைவிட வேண்டி நடைபெற்றது.

இதனையடுத்து விவசாயிகளின் இலவச மின்சாரத்தை பெறுவதற்கு வழிவகை செய்யும் மின்சார சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இதற்கு முன்பாக போராட்டத்தை மின்வாரிய ஊழியர்கள் சங்க செயலாளர் ஆறுமுகம் தொடங்கி வைத்துள்ளார். இதில் பெரும்பாலான மின்வாரிய ஊழியர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். அதன்பின் முடிவில் கூட்டுக்குழு சங்க உறுப்பினர் ரவிச்சந்திரன் நன்றி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |