Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பன்றிக்கு போடப்பட்டதில்… ” சிக்கிய 7 வயது யானை”… பின்னர் அரங்கேறிய கொடுமை..!!

சத்தியமங்கலம் அருகே மின் வேலியில் சிக்கி யானை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த விவசாயி 45 வயதுடைய காளய்யா. இவர் தன்னுடைய நிலத்தில் ராகி, மக்காச்சோளம் போன்ற தானியங்களை பயிரிட்டுள்ளார். இதனால் பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தாமல் இருப்பதற்காக தோட்டத்தை சுற்றி மின்சார வேலிகள் அமைத்து இரவு நேரங்களில் அதில்  மின்சாரத்தை செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஆண் யானை ஒன்று தோட்டத்திற்குள் புகுந்ததால் மின்வேலியில் சிக்கி உயிரிழந்தது .

பின்னர் இன்று காலையில் தோட்டத்தில் உயிரிழந்து கிடந்த யானையை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து  வந்த வனத்துறை அலுவலர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் யானையின் உடலை மீட்டு உடற்கூறாய்வு செய்தனர். ஆய்வில் உயிரிழந்த யானைக்கு ஏழு வயது இருக்கலாம் என்றும் இந்நிலையில் சிக்கியதால் தான் யானை உயிரிழந்தது என்றும் கூறினர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த தோட்டத்தின் உரிமையாளர் தலைமறைவாகி விட்டார். இதனை தொடர்ந்து வனத்துறையினர் காளய்யாவை  தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |