Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மின்விசிறியை பொருத்தும் போது …. திடீரென்று பாய்ந்த மின்சாரம் …. தொழிலாளருக்கு நடந்த கொடூரம் ….!!!

மின்சாரம் தாக்கி தொழிலாளி ஒருவர்  உயிரிழந்த சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்துள்ள ஆதனூர் காலனி பகுதியை சேர்ந்த முத்து என்பவர் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் மின்விசிறியை பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது திடீரென்று மின்சாரம் தாக்கியதில் முத்து தூக்கி வீசப்பட்டார். இதைக் கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு  ஆரணி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினார்.

இதனால்  அவருடைய பிணத்தை குடும்பத்தினர்  வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளனர் .இந்நிலையில் இது குறித்து தகவல் அறிந்த ஆரணி தாலுகா போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் மற்றும் போலீசார் ஆகியோர் அவருடைய வீட்டிற்குச் சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி  பிரேதப்  பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதன்பின் பிரேதப்  பரிசோதனை முடிந்தபிறகு அவரின் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |