Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் நடிக்க வரும் மீரா ஜாஸ்மின்….? வெளியான புதிய தகவல்….!!

மீரா ஜாஸ்மின் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை மீரா ஜாஸ்மின் மலையாள நடிகை ஆவார். இவர் 2002ஆம் ஆண்டு வெளியான ”ரன்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு அனில் ஜான்டைட்டஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

7 வருடங்களுக்கு பின் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் மீரா ஜாஸ்மின்…..! – www.patrikai.comதிருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த மீரா ஜாஸ்மின் தற்போது  ஏழு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடிக்க இருக்கிறார். இந்நிலையில், மலையாள இயக்குனரான சத்தியன் அந்திக்காடு இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும், இவர் இந்த படத்திற்காக தனது உடல் எடையை 20 கிலோ வரை குறைத்து உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |