பிரேசிலில் ஒரு இளம்பெணிற்கு குழந்தை இறந்து பிறந்த நிலையில், அடக்கம் செய்யும் போது குழந்தை உயிர் பிழைத்த சம்பவம் பிரம்மிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசில் நாட்டில் இருக்கும் Rondonia என்னும் மாகாணத்தில் வசிக்கும் 18 வயது இளம்பெண், கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டிருக்கிறார். எனவே, மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருக்கிறார். இந்நிலையில் அவருக்கு திடீரென்று வீட்டில் வைத்து குழந்தை பிறந்தது. அப்போதுதான், தான் கர்ப்பமாக இருந்திருக்கிறோம் என்பதை அவர் அறிந்திருக்கிறார்.
இதற்கு முன்பு, அவர் மருத்துவமனைக்கு சென்றபோது, மருத்துவர்களும் அவர் கர்ப்பமாக இருப்பதை கண்டறியவில்லை என்பது தான் ஆச்சர்யம். இந்நிலையில் 7வது மாதத்தில் அவருக்கு குழந்தை பிறந்திருக்கிறது. குழந்தை பேச்சு மூச்சின்றி இருந்ததால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
மருத்துவர்கள் குழந்தை இறந்தே பிறந்திருக்கிறது என்று கூறினர். மேலும், இறப்பு சான்றிதழையும் கொடுத்து விட்டார்கள். அதன் பிறகு குழந்தையை அடக்கம் செய்யும் பணி நடைபெற்றது. அப்போது, திடீரென்று குழந்தை மூச்சு விட்டதோடு, இதயம் துடிப்பதை பார்த்து, அடக்கம் செய்பவர் அதிர்ந்து போனார். அதன்பிறகு, குழந்தையை வேறு மருத்துவமனைக்கு எடுத்து சென்று, அவசர பிரிவில் தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.