தற்போது உள்ள 2021 காலண்டர், கடந்த 1971 காலண்டர் போல ஒன்றாக உள்ள அதிசயம் நிகழ்ந்துள்ளது.
கடந்த ஆண்டு மக்கள் கொரோனா, இயற்கை பேரிடர் போன்ற பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தனர். இதனால் பொருளாதார சார்ந்த பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தனர். இந்த பாதிப்பு சாமானியர்கள், செல்வந்தர் வரை அனைத்து தரப்பினரையும் ஒரு வருடம் வீட்டிலேயே முடங்கி வைத்தது, அரசியல் தலைவர்கள், நடிகர்கள், வீரர்கள் என பல முக்கிய தலைவர்கள் உயிரை இந்த கொரோனா பறித்தது. 2021 ஆம் ஆண்டு சற்று ஆறுதலாக இருக்க வேண்டும் என்பது அனைவரின் ஏக்கமாக இருந்து வந்தது. வருகிற 2021ல் பல நன்மைகள் மக்களுக்கு வாரி வழங்கும் என்பதில் எந்தவித மாற்றம் இல்லை என்பது இந்த நாள்காட்டி கூறுகின்றது.
கடந்த ஐம்பது வருடத்திற்கு முன்பு உள்ள 1971 ஆம் ஆண்டு காலண்டரும் 2021 ஆம் ஆண்டு காலம் ஏறக்குறைய ஒரே மாதிரியாக அமைந்துள்ளது. இதில் வரும் தேதி மற்றும் நாள் இவை இரண்டும் ஒரே மாதிரி உள்ளது, அனைவர் மத்தியிலும் ஒரு எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. இதனால் வரும் நாட்கள், முன்பு நாட்கள் போலவே, 50 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அந்த வாழ்க்கை போலவே ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.