விலங்கியல் பூங்காவில் உள்ள புலி ஒன்று பாடுவதைப் போல குரலெழுப்பி வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவில் உள்ள பர்னால் ஊரிலிருக்கும் விலங்கியல் பூங்காவில் ஷெர்ஹான் என்ற 8மாத புலி உள்ளது. இந்த புலி வழக்கமாக பார்வையாளர்களை கண்டால் உறுமும். ஆனால் தற்போது வித்தியாசமாக பாடுவதுபோல குரல் எழுப்பி வருகிறது.
அதனால் இந்த பாடும் புலியை காண்பதற்கு ஏராளமான பார்வையாளர்கள் இப்பூங்காவில் குவிந்து வருகின்றன. இந்தப் புலி பிறந்ததிலிருந்தே இதுபோன்று பாடும் வகையில் குரல் எழுப்பி வருவதாக பூங்காவின் பணியாளர்கள் தெரிவித்தனர்.