வியாபாரியை மிரட்டி பணம் பறிக்க முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள அரக்கோணம் பகுதியில் வியாபாரிகளை மிரட்டி மர்மநபர் பணம் பறிப்பதாக காவல்துறையினருக்கு ரகசியதகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அரக்கோணம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் மர்மநபர் ஒருவர் கடைக்காரரிடம் பணம் தருமாறு மிரட்டிக் கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியாக சென்ற காவல்துறையினர் அவரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் தினேஷ்குமார் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தினேஷ்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.