பாரம் திரைப்படத்திற்கு நான் போஸ்டர் ஓட்டுவேன் என கூறியபடி தெருவில் இறங்கி போஸ்டர் ஒட்டி உள்ளது மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது
கடந்த 21ஆம் தேதி வெளியான ‘பாரம்’ திரைப்படம் தேசிய விருதை பெற்றுள்ளது. இந்த படத்தை இயக்கியவர் ப்ரியா கிருஷ்ணசாமி. தினங்களுக்கு முன்பு இத்திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய இயக்குனர் மிஷ்கின் இந்தப் படம் வெளிவரும் பொழுது விளம்பரத்திற்கு நான் போஸ்டர் ஓட்டுவேன் என கூறியுள்ளார்.
அதே போன்று படம் வெளியானதை தொடர்ந்து மிஸ்கின் தெருவில் இறங்கி போஸ்டர் ஒட்டி சொன்னதை செய்து காட்டியுள்ளார். அவர் தனது சொந்த செலவிலேயே போஸ்டர் தயார் செய்துள்ளார். அவர் போஸ்டர் ஒட்டும் படியான புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகின்றது. பாரம் திரைப்படத்தின் மீது மிஸ்கின் காட்டிவரும் அன்பிற்கு விலை மதிப்பு இல்லை என அப்படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.