Categories
உலக செய்திகள்

வெளிநாடுவாழ் இந்திய அழகி போட்டி…. முதலிடம் பிடித்தது யார்?.. வெளியான தகவல்…!!!

இங்கிலாந்தைச் சேர்ந்த குஷி படேல் இந்த வருடத்திற்கான வெளிநாடுவாழ் இந்திய அழகி பட்டத்தை வென்றிருக்கிறார்.

பிறநாடுகளில் வசிக்கக்கூடிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்களுக்கான அழகி போட்டி ஒவ்வொரு வருடமும் நடத்தப்படும். இந்திய நாட்டிற்கு வெளியில் சுமார் 29 வருடங்களாக இந்த அழகிப் போட்டி நடந்துகொண்டிருக்கிறது. இந்திய விழாக் குழுவால் இந்த வருடத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவு இந்தப்போட்டி நடத்தப்பட்டது.

இதில், இங்கிலாந்து நாட்டை சேர்ந்த குஷி படேல் வெளிநாடு வாழ் இந்திய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மாடலான இவர் மருத்துவ மாணவி ஆவார். வெளிநாடு வாழ் இந்திய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் அவர் பேசியதாவது, இந்த வருடத்தில் பல்வேறு நலஉதவி  நிகழ்வுகளில் கலந்து கொள்ளவும், ஏழை மக்களுக்கு உதவி செய்யவும் திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |