அமெரிக்காவில் நடந்த உலக அழகி போட்டியில் மியான்மர் நாட்டிலிருந்து பங்கேற்க பெண் “மியான்மருக்காக பிரார்த்தியுங்கள்” என்று எழுதப்பட்ட பதாகையை ஏந்தி வந்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தின் ஹாலிவுட் அரங்கில் இருக்கும் ராக் ஹோட்டல் & காசினோவில் 69-ஆம் வருட உலக அழகிப் போட்டி நடைபெற்றிருக்கிறது. கொரோனா காரணமாக அதிக பாதுகாப்புகளுடன் 74 நாடுகளிலிருந்து வந்த பெண்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.
இதில் மியான்மர் நாட்டிலிருந்து வந்த துசர் விண்ட் லவின் என்ற பெண் இறுதிச்சுற்றுக்கு முன்னேறவில்லை. எனினும் அதற்கு முந்தைய சுற்றில் “மியான்மருக்காக பிரார்த்தியுங்கள்” என்று எழுதப்பட்ட பதாகையை ஏந்தி வந்துள்ளார். அதாவது மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து ராணுவம் ஆட்சியை கைப்பற்றி, தங்களுக்கு எதிராக போராடும் மக்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை கையாண்டு வருகிறது.
இதனால் சுமார் 790 மக்கள் பலியாகியுள்ளனர். எனவே உலக நாடுகள் தங்கள் நாட்டிற்கு உதவ வேண்டுமென அவர் பதாகை ஏந்தி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.