Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் காணாமல் போன இந்திய பெண்…. மோஸ்ட் வாண்டட் பட்டியலில் இணைத்த FBI…!!!

அமெரிக்க நாட்டில் மாயமான இந்தியாவை சேர்ந்த பெண் மூன்று வருடங்களாக கண்டுபிடிக்கப்படாமல் இருக்கும் நிலையில் FBI-யின் மாயமானவர்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க நாட்டின் நியூஜெர்சியை சேர்ந்த மயூஷி பகத் என்ற 28 வயதுடைய பெண் 3  வருடங்களுக்கு முன் மாயமானார். தற்போது வரை கிடைக்கவில்லை. இந்நிலையில், FBI-யின் மாயமானவர் பட்டியலில் அவரின் பெயர் இணைக்கப்பட்டுள்ளது. அந்தப் பெண் கடந்த 2019 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி அன்று வீட்டிலிருந்து வெளியேறி இருக்கிறார்.

அவரின் குடும்பத்தினர், மே மாதம் முதல் தேதி அன்று புகார் தெரிவித்தனர். FBI, நேற்று அவரின் பெயர் தங்கள் வலைப்பக்கத்தில் மாயமானவர்களின் பட்டியலில் இணைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

அந்தப் பெண் பற்றிய தகவல்கள் தெரிந்தால் FBI அலுவலகத்திலோ அல்லது அருகே இருக்கும் அமெரிக்க தூதரகத்திலோ தெரிவிக்குமாறு கூறப்பட்டிருக்கிறது. மேலும், FBI-யின் இணையதள பக்கத்தில் அந்த பெண்ணின் புகைப்படத்தை மாயமான நபர் என்ற மோஸ்ட் வாண்டட் பட்டியலில் இணைத்திருக்கிறது.

Categories

Tech |