Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“ஏடிஎம் அருகே தவறவிட்ட பணம்”…. போலீசில் ஒப்படைத்த உணவக ஊழியர்…. நேர்மைக்கு பாராட்டு….!!!!!!

ஏடிஎம் அருகே கிடந்த பணத்தை நேர்மையாக போலீசில் ஒப்படைத்துள்ளார் உணவக ஊழியர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருச்சுழி அருகே இருக்கும் நரிக்குடி இணைக்கநேரி கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் தனது குடும்ப மருத்துவச் செலவிற்காக திருச்சுழி பேருந்து நிலையம் அருகே இருக்கும் ஏடிஎம் மையத்தில் 20 ஆயிரம் ரூபாய் எடுத்து இருக்கின்றார். பின் பஜார் பகுதியில் பொருட்கள் வாங்குவதற்காக பணம் எடுத்த போது அதில் 5000 ரூபாய் குறைவாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து தவறவிட்ட பணத்தை ஏடிஎம் மையத்திற்கு வந்து தேடி உள்ளார். ஆனால் கிடைக்கவில்லை.

இதனிடையே திருச்சுழி பேருந்து நிலையம் அருகே இருக்கும் உணவகத்தில் ஊழியராக பணிபுரியும் தியாகராஜன் என்பவர் ஏடிஎம் மையம் வழியாக சென்றபோது அங்கு 5000 ரூபாய் பணம் இருந்ததை கண்டு அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இந்த நிலையில் பணத்தை தவறவிட்ட ராஜேந்திரன் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வந்தபோது பணம் காவல் நிலையத்தில் இருந்ததைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தார். இதன்பின் தனியார் உணவக ஊழியர் தியாகராஜன் முன்னிலையில் தவறவிட்ட ஐயாயிரம் ரூபாய் ராஜேந்திரனிடம் வழங்கப்பட்டது. இதன்பின் பணத்தை நேர்மையாக ஒப்படைத்த உணவக ஊழியர் தியாகராஜனை போலீசார் பாராட்டினார்கள்.

Categories

Tech |